top of page

துருப்பிடித்த இரும்புக் கரம்

Betta

லஞ்ச பாஷாவிற்கு பரிசு


ஞாபகம் இருக்கிறதா மக்களே? குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்றார் திராவிட முதல்வர் ஸ்டாலின். 


குற்றம் நடந்த பிறகு தான் தனக்கு இரும்பு கரம் இருக்கிறது என்று ஸ்டாலின் அவர்களுக்கு நினைவு வருகிறது. அக்குற்றத்தை பற்றிய செய்திகள் அடங்கிய பின் தனது இரும்பு கரம் மறைந்து விடுகிறது. இந்த திராவிட மாடல் அரசு குற்றங்களை தடுப்பதும் இல்லை குற்றவாளிகளை அடக்குவதும் இல்லை. என்னவென்று ஆராய்ந்து பார்த்த பொது தான் தெரியவந்தது ஒரு செய்தி, திராவிட முதல்வரின் இரும்புக்கரங்கள் துரு பிடித்து கிடக்கின்றன என்று. 


இது வீண் குற்றச்சாட்டு அல்ல ஆதாரத்தோடு அமைந்த நூறு நிகழ்வுகள் உள்ளன. இக்கட்டுரையில் லஞ்சம் வாங்கியதற்காக பெரும் பரிசு பெற்ற உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷாவின் கதையை பார்ப்போம்.


உதகமண்டலம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தவர் ஜஹாங்கிர் பாஷா. லஞ்ச பெருச்சாளி ஆன இவர், உதகமண்டலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குடியிருப்பு மற்றும் வணிக லாபத்திற்காக பல சலுகைகள் தர ₹11.70 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். லஞ்ச பணத்துடன் கடந்த 10 நவம்பர் 2024 அன்று சொந்த ஊருக்கு பயணிக்க இருந்த இவர், உதகை தொட்ட பெட்டா பகுதி அருகே லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டார். 






சலுகை 

லஞ்ச தொகை 

குடியிருப்பு பயன்பாட்டிலிருந்து வணிக பயன்பாட்டிற்கு வரி இனத்தை மாற்றி கொடுத்தல் 

₹2.49 லட்சம் 

சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன நிறுத்த உரிமம் வழங்கியது 

₹2 லட்சம் 

பாரதியார் வணிக வளாகத்தில் துணிக்கடையை உணவு விடுதியாக மாற்றி கொடுத்தது 

₹2.50 லட்சம் 

தனியாருக்கு சொந்தமான கட்டட வரியை குறைத்து நிர்ணயம் செய்தது 

₹4.71 லட்சம் 

மொத்தம் 

₹11.70 லட்சம்  



விசாரணையின் போது, அவர் பயணித்த வாகன ஓட்டுனரும் பாஷா லஞ்சம் வாங்கியதை உறுதி செய்தார். கையும் களவுமாக ஆதாரத்துடன் சிக்கிய அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். 


இரும்புக்கர அரசாக இருந்திருந்தால் அந்த லஞ்ச பெருச்சாளியை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், பொதுவாக லஞ்சம் வாங்கும்போது  பிடிபட்டாலோ அல்லது ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்டாலோ தான் கைது செய்ய முடியும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அப்படியே ஆனாலும் வருமான கணக்கில் வாராத இவ்வளவு பணத்துடன் சிக்கிய அதிகாரியை பணியிலிருந்து இடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும்.  


மாறாக திராவிட மாடல் அரசு பாஷாவுக்கு கொடுத்த பரிசு - திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி இயக்குனர் பதவி. 


ஆம், லஞ்ச பணத்துடன் பிடிபட்ட இரண்டு வாரத்திற்குள் திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். 




தவறு செய்தவரை தண்டிக்காமல் அவர்களுக்கு வெகுமதி குடுப்பது தான் திராவிட மாடல் அரசின் லஞ்ச ஒழிப்பு கொள்கை போலும். உதகையில் லஞ்சம் வாங்கியவர் திருநெல்வேலியில் லஞ்சம் வாங்க மாட்டாரா? நிச்சயம் அங்கேயும் பாஷா தனது லஞ்ச வேட்டையை துவங்குவார். 


இப்போது இருக்கும் பெரும் கேள்வி என்னவென்றால், கடைசியாக நால்வரிடம் பெற்ற லஞ்ச பணத்துடன் தான் பாஷா சிக்கியுள்ளார். தான் பதவி ஏற்ற காலத்திலிருந்து எவ்வளவு லஞ்சம் பெற்றிருப்பார்? எத்தனை சட்ட விரோதமான உரிமங்களையும் சலுகைகளையும் கொடுத்திருப்பார்? இதெல்லாம் விசாரிக்கப்படுமா?


இந்த திராவிட மாடல் அரசில் இதெற்கெல்லாம் வாய்ப்பில்லை. லஞ்சம் வாங்கியவரை தண்டிக்காத  அரசு, அவர் செய்த தவறுகளை நிச்சயம் சரி செய்ய மாட்டார்கள்.  


திராவிட முதல்வரின் துரு பிடித்த இரும்பு கரத்தின் ஒரு துரும்பு தான் இது.


Comments


bottom of page